
விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார் வனிதா விஜயகுமார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் குடும்பத்தை பிரிந்து மூன்று திருமணம் செய்து அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கோலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறி உள்ளார். தொடர்ந்து பல படங்களில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியல் குறித்து கேட்க விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன், அவரின் தொண்டனாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
