Actress Usha Rani Passed Away
Actress Usha Rani Passed Away

தமிழில் சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகையான உஷாராணி உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

Actress Usha Rani Passed Away : தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தவர் உஷாராணி. இவர் தமிழில் அரங்கேற்றம், என்னை போல் ஒருவன், பட்டிக்காட்டு பொன்னையா, சிவந்த கண்கள் என கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து இருந்தார்.

மலையாள சினிமாவில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் என் சங்கரன் நாயர் என்ற மலையாள இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.

Treadmill நடனம்: ரசிகரை ‘மகனே’ என அழைத்த கமல் – மகிழ்ச்சில் அஸ்வின் குமார்..!

இவர் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நீண்ட நாட்களாக இதனால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிப்பு அதிகமாகி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.