கோமியத்தை வித்துக்கூட பொழச்சிக்கலாம்: தமன்னா பேச்சுக்கு, வைரலாகும் கருத்துகள்

‘கோமியத்தை எவன்டா வாங்குவான்; என்ன பேசுது தமன்னா’ என்ற விமர்சனமும் வைரலாகி வரும் டோலிவுட் சினிமா டிரைலர் பற்றிப் பார்ப்போம்..
மகா கும்பமேளாவில் தமன்னா நடித்த ஒடேரா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அசோக் தேஜா இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகியுள்ள ‘ஒடேலா-2’ படம் வரும் 17-ம் தேதி ரிலீஸாகிறது.
சிவனின் வாகனமான பசுவை இந்து மக்கள் வணங்கி வரும் நிலையில், சிவனின் ரூபமாக இப்படத்தில் நடித்துள்ளார். ‘நாம நிக்கிறதுக்கு தேவை பூமாதா, நாம வாழ்றதுக்கு தேவை கோமாதா, நீங்க வாழ மாட்டைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை. கோமியத்தை வித்துக்கூட பொழச்சிக்கலாம்’ என டிரைலரில் பேசியுள்ளார். இந்த வசனத்துக்கு, தற்போது கலவையான வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.
இந்த வசனம் குறித்து இணையத்தில், ‘சனாதன தர்மத்தை இதைவிட சிறப்பாக யாருமே சொல்லிவிட முடியாது’ என பாராட்டியும்,
‘என்னடா டயலாக் இது, எவன்டா எழுதி கொடுத்தான், கோமியத்தை எப்படிடா விக்குறது? அதை ஏன் இப்படி பேசுது தமன்னா? என ட்ரோல் செய்தும், அடுத்த கங்கனா ரணாவத்தாக தமன்னா, சீக்கிரமே பாஜகவில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை’ எனவும் பலவாறு விமர்சிப்பது வைரலாகி தொடர்கிறது. இந்த பரபரப்பு சூழலில், இது தொடர்பாக தமன்னாவின் பதில் என்னவாக இருக்கும்.. ‘ஓம்நமசிவாய..!?