சரண்யா பொன்வண்ணனின் முதல் கணவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கமலுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பட்டய கிளம்பி வருகிறார்.

நடிகர் பொன்வண்ணனை பாரதி ராஜா முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சரண்யா கடந்த 1988-ல் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட நிலையில் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமைய அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.