நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இரண்டு மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் போது நடந்த நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் என்னும் நோயின் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி படுத்தினார். அதன் பிறகு அதற்காக தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக கூறி மீண்டும் பழையபடி உத்வேகமாக படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வந்திருந்தார்.

அந்த வகையில் தற்போது குஷி மற்றும் சிட்டாடல் வெப் தொடர் போன்ற படப்பிடிப்புகளை நிறைவு செய்திருக்கும் சமந்தா தற்போது தோழிகளுடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வரும் அவர் தற்போது ஜிம்மில் தரையில் படுத்துக்கொண்டு தனது கைகள் மற்றும் கால்களால் இன்னொரு பெண்ணை பேலன்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அதில் ‘நாங்கள் இப்படி தான் பார்ட்டி பண்ணுவோம்’ என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டு இருக்கிறார். ஜிம்னாஸ்டிக் முறையில் அவர் பகிர்ந்திருக்கும் அந்த அட்டகாசமான வீடியோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

https://instagram.com/stories/samantharuthprabhuoffl/3154590651820239616?igshid=NjZiM2M3MzIxNA==