சந்திரமுகியாக மாறியுள்ளார் நடிகை ரவீனா.

தமிழ் சினிமாவில் ராட்சசன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரவீனா. அதைத்தொடர்ந்து இவர் மேலும் சில படங்களில் நடித்தார்.

பிறகு சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியல் நாயகியாக நடித்த இவர் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றார்.

சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்திரமுகி கெட்டப்பில் சந்திரமுகி படத்தில் இடம்பெறும் பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

இதோ அந்த வீடியோ