actress rambha latest stills
actress rambha latest stills

மகள் படித்து பட்டம் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார் ரம்பா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரம்பா.

பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருக்கின்றன.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது என்னுடைய மூத்த மகள் பள்ளி படிப்பை முடித்து பட்டம் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மா பொண்ணு மாதிரியே தெரியல அக்கா தங்கச்சி மாதிரி தான் இருக்கீங்க என கமெண்ட் செய்து ரம்பாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

என்னைக்குமே நீங்க எங்க கனவு கன்னி தான் என்று 90 கிட்ஸ் ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட் செய்கின்றனர்.

இதோ அந்த வீடியோ