பிரபல நடிகை பிரணிதாவுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. அவருடைய திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Actress Pranita Marriage Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு சில படங்களில் நடித்தவர் ப்ரணிதா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் நடித்து வரும் இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சகுனி, எனக்கு வாய்த்த அடிமைகள், சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பிரபல நடிகை பிரணிதாவுக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது இந்த ஊரடங்கு நேரத்தில் சிம்பிளாக தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரணீத்தா திருமணத்திற்காக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.