விஜய் படத்தை விட, சூர்யா படத்தில் நடித்ததுதான் பெருமை: பூஜா ஹெக்டே பேச்சால் ரகளை..
ஜனநாயகன் படத்திலும், ரெட்ரோ படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ள சமாச்சாரம் பார்ப்போம்..
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறுகிறது. இப்படம், மே1-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பூஜா ஹெக்டே கூறியதாவது: ‘ரெட்ரோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அழகாக வந்துள்ளது. ரெட்ரோ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதுவரை நடித்த படங்களிலேயே நீங்கள் பெருமைப்படக்கூடிய படம் எது? என்ற கேள்விக்கு பூஜா ஹெக்டே கொடுத்த பதில் தான் இது.
இதை கேள்விப்பட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சிலர், ‘அப்போ.. ரெட்ரோ படத்தை நினைத்து பெருமைப்படும் பூஜா ஹெக்டே ‘ஜனநாயகன்’ படத்தை நினைத்து பெருமைப்படவில்லையா? சிறுமைப்படுகிறாரா? என கேட்டுப் பொங்கி வருகின்றனர்.
ரெட்ரோ திரைப்படம் ஒரு காதல் படமாக தயாராகியுள்ளது. எனவே, அதில் பூஜா ஹெக்டேவிற்கும் முக்கியமான ரோல் இருக்கும். ஆனால், ‘ஜனநாயகன்’ அரசியல் படமாக தயாராகி வருகின்றது. அதுவும் விஜய்யின் கடைசிப் படமாகும்.
எனவே, ரெட்ரோ படத்தை ஒப்பிடும் போது, ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைவாகவே இருக்கும் என தெரிகின்றது. அதனால் தான் பூஜா ஹெக்டே ‘ரெட்ரோ’ படத்தை செலக்ட் செய்திருக்கிறார். ‘Pls Cool..தளபதி fans..’ என பூஜா விசுவாசிகள் விளக்கவுரை கொடுத்து வருகின்றனர்.