அஜித்தைப் போலவே என்னை அறிந்தால் பட நடிகை அனைத்து தரப்பினருக்கும் உதவியுள்ளார்.

Actress Parvati Nair Contribution : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்து இருந்தார். அருண் விஜய்க்கு மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.

தற்போது குரானா வைரஸ் காரணமாக அனைத்துத் துறைகளையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வைரஸ் பரவுகிறது மக்களை பாதுகாக்க தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். ‌

அடி வாங்கி வாய்ப்பில்லாமல் போனா கூட ஓகே தான்.. ஆனா அவருக்கு வில்லனாக நடிக்கணும் – தல அஜித்தின் இந்த ஆசைய கேட்டீங்களா.!

தல அஜித் மத்திய அரசு, மாநில அரசு, பெப்சி, பத்திரிக்கையாளர் சங்கம் என அனைத்து தரப்பினருக்கும் உதவி இருந்தார். அவரைப் போலவே நடிகை பார்வதி நாயரும் உதவியுள்ளார்.

ஆம் இவர் மத்திய அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம், தமிழக அரசுக்கு ரூபாய் ஒரு லட்சம், பெப்ஸி தொழிலாளர் அமைப்புக்கு 1500 அரிசி மூட்டை மற்றும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு ஆயிரம் அரிசி மூட்டை என கொடுத்து உதவியுள்ளார். ‌

இதனால் பலரும் பார்வதி நாயரின் உதவிக்கு பாராட்டு தெரிவித்தும் நன்றி கூறியும் வருகின்றனர்.