தங்கலான் திரைப்படத்தின் அனுபவம் குறித்து நடிகை பார்வதி பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் பார்வதி. தமிழில் பூ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் சென்னையில் ஒரு நாள், பெங்களூர் டேஸ், மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார். மலையாளத் திரை உலகில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது மீண்டும் தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் நடிகை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், இது எனக்கு மிகவும் திருப்தியான படம். பணம், புகழைத் தாண்டி பணியை சிறப்பாக செய்த திருப்தியை தங்கலான் படத்தில் நடித்ததன் மூலம் பெற்றுள்ளேன். உங்களைப் போலவே இப்படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளேன் என கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.