38 வருஷமாக கண்ணகியாகத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்: நடிகை குஷ்பு பேச்சு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பிரச்சினை, பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் இதுகுறித்து, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு,
அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் கொடுத்து விட்டோம். கல்வியை இலவசமாக கொடுத்து விட்டோம் என்பதால், அந்த பெண்ணிற்கு நடந்த அனைத்தும் சரியாகிவிடுமா? அந்த மாணவிக்கு ஏற்பட்ட பிரச்சினையை அந்த பெண்ணால் சாவுகிற வரைக்கும் மறக்க முடியாது.
2018-ம் ஆண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது, ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும்போது, எப்படி அந்த நபரை இத்தனை ஆண்டுகள் விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. இது குறித்துதான் நானும், அண்ணாமலை அவர்களும் முதலமைச்சரிடம் கேள்வி கேட்டு வருகிறோம். பல ஆண்டுக்கு முன் வழக்கு போடவில்லை 2018ம் ஆண்டு தான் அது நடந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் இது போன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, பணம் கொடுப்பது, அந்த கட்சியை சேர்ந்தவர், இந்த கட்சியை சேர்ந்தவர் என பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இதை நாங்கள் பாஜக சார்பாக பேசவில்லை, பெண் என்கிற முறையில் தான் பேசுகிறோம். தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியலாக மாற்றாதீர்கள். இந்த மாநிலத்தில் நடக்கவில்லையா, அந்த மாநிலத்தில் நடக்கவில்லையா என்று கேள்வி கேட்டு, பெண்களை அரசியலில் ஃபுட்பால் ஆக்காதீர்கள்.
நான் என்றைக்கும் கண்ணகி தான், இதில், புதுசு ஒன்றும் இல்லை, சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆகிறது. 38 வருஷமாக கண்ணகியாக தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.
எப்போதும் மனதில் பட்டதை பேசுவேன், மனதில் பட்டதை செய்வேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை’ என அதிரடியாக பேசினார் குஷ்பு.