நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு பல டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் நாணியுடன் சமீபத்தில் தெலுங்கில் வெளியான “தசரா” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தசரா படத்தின் பிரமோஷனில் எனக்கு பிடித்த லுக் இதுதான் என்று எடுக்கப்பட்டிருக்கும் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களால் லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.