விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்த நடிகை கஸ்தூரியின் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் ஏ ஆர் ரகுமான். இவர் சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருது நிகழ்ச்சியின் போது தனது மனைவியை பேசும்படி மேடைக்கு அழைத்து ஹிந்தியில் பேசாதே தமிழில் பேசு என கூறியது இணையதளங்களில் பயங்கரமாக வைரலானது.

இந்த செய்திக்கு நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரகுமான் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய்மொழி என்ன? வீட்ல குடும்பத்தில் என்ன பேசுவாங்க? என்பது போல் கேள்விகளை பதிவிட்டிருந்தார். அதற்கு அவர் காதலுக்கு மரியாதை என்று ஒரே வரியில் பதில் அளித்திருக்கிறார். இவர்களது இந்த ட்விட்டர் பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்ட நிலையில் இது குறித்து நேர்காணலில் விளக்கம் அளித்திருக்கும் நடிகை கஸ்தூரி அளித்திருக்கும் பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், என்னை விட ரகுமான் சாரை பற்றி யாருக்கு தெரியும் என்ற செருக்கு எனக்கு உள்ளது நான் அவரது தீவிர ரசிகை. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரகுமானின் மனைவிக்கு தமிழ் தெரியாதது என்பது ஆச்சரியமாக இருந்தது. அனைவருக்கும் தோன்றிய கேள்வியை தான் நான் கேட்டேன். இதில் என்ன தவறு உள்ளது. இதைத் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர் என்ன கூறியிருக்கிறார்.