நடிகை யுவானாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகை யுவனா. தமிழில் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அனைவருக்கும் பரீட்சையமானார்.

முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த இவரது நடிப்பில் தற்போது டோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் லெட்ஸ் கெட் மேரிட் (LGM) திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் கவனம் செலுத்தி வரும் நடிகை யுவனா தற்போது ஸ்மோக்கிங் எஃபெக்டில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.