பெயருடன் குழந்தையின் முகத்தை வெளியிட்ட இந்திரஜா ரோபோ சங்கர். குவியும் லைக்ஸ்..!
முதல்முறையாக இந்திரஜா ரோபோ சங்கர் குழந்தையின் முகத்தை வெளியிட்டு உள்ளார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் காமெடியில் கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகன் இந்திரஜா ரோபோ சங்கர் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்
கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.
போட்டியில் பங்கேற்ற சில வாரங்களில் கர்ப்பமான காரணத்தினால் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறினார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருந்ததாக குடும்பத்தினர் அறிவித்து இருந்தனர்.
இதுவரை குழந்தையின் முகத்தை காட்டாமல் இருந்த இந்திரஜா குழந்தைக்கு முருகர் வேடம் போட்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு குழந்தைக்கு நட்சத்திரன் என்ற பெயரை வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram