முதல் முறையாக தனது மகளின் போட்டோவை வெளியிட்டுள்ளார் அபிராமி.

தமிழ் சினிமாவில் விருமாண்டி உட்பட பல்வேறு படங்களில் நடித்து திரை உலகில் பிரபலமானவர் அபிராமி. விருமாண்டி படத்தில் இவர் கொடுத்த அசத்தலான நடிப்பால் இவரை பலரும் விருமாண்டி அபிராமி என்று அழைத்து வருகின்றனர்.

படங்களில் பிசியாக நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு சிறு இடைவெளி எடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய வளர்ப்பு மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து ஓனம் கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.