Pushpa 2

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் பற்றி, குஷ்பூ அப்டேட்..

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் குறித்து, குஷ்பூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக காண்போம்..

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தளங்களில் சுவடு பதித்து வருபவர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அடுத்ததாக அவர் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றிருந்தது. படம் ரசிகர்களை சிறப்பாக என்டர்டைன் செய்து 100 கோடி கிளப்பிலும் இணைந்திருந்தது.

இந்த படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாத நிலையில் சுந்தர்.சி இந்த படத்தின் நாயகனாக கமிட் ஆகி நடித்திருந்தார்.

படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். முன்னதாக அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் அரண்மனை 4 படவும் அந்த வெற்றி கூட்டணியில் இணைந்து கொண்டது.

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் சுந்தர் சி. அடுத்ததாக அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கவுள்ள அவர், படத்திலும் நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கலகலப்பு 3 படம் குறித்து, நடிகையும் சுந்தர்.சி.யின் மனைவியுமான குஷ்பூ தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணன் ரவி குரூப்புடன் இணைந்து சுந்தர்.சி இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கணவரின் புகைப்படத்தையும் குஷ்பூ பகிர்ந்துள்ளார்.

குடும்பம், தொழில் இரண்டிலும் குஷ்பூ ரெம்ப சுறுசுறுப்பு.

actres kushboo announced about sundar c direct kalakalappu 3 movie
actres kushboo announced about sundar c direct kalakalappu 3 movie