தனுஷ் படம் குறித்து மறைமுகமாக நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டிருந்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது கட்ட குஸ்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் ‘டி 50’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் “நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதாக பரவி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் அந்த படத்தில் ஒரு பகுதியாக நடிக்க விரும்பினாலும் என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக என்னால் அதில் நடிக்க முடியாது. எனது சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று படம் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் கூறியது டி-50 படத்தை தான் என்று கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.