பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகத்தின் வெற்றிக்காக நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சீயான் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தியிருந்த நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் -2 வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள். வீர வேல்! வெற்றி வேல்! இப்படிக்கு ஆதித்த கரிகாலன் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.