‘வீர தீர சூரன்’ படம் இன்று மாலை 6.30 காட்சி தொடக்கம்: பஞ்சாயத்து, சுமூக தீர்வு முழு விவரம்..
தமிழ் சினிமா வரலாறு பார்க்காத பஞ்சாயத்து இல்லை. அதில், ‘வீர தீர சூரன்’ பஞ்சாயத்து வேற லெவல்.!
விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’ படம் திரையரங்குகளில் இன்று மாலை 6.30 மணி காட்சியுடன் ரிலீஸாகிறது. இது குறித்த விவகாரம் காண்போம்.
2 பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின், 2-வது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, இன்று 27-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவுகளும் தமிழகத்தில் நடந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள பி4யு எண்டர்டெயின்மென்ட், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ரிலீசுக்கு பிரச்சினையாக மாறியது.
அதாவது ஒப்பந்தத்தை மீறி, ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு, எதிராக ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிமன்றம்
‘வீர தீர சூரன்’ படத்தை 4 வாரங்கள் ரிலீஸ் செய்ய தடை விதித்தது.
வழக்கை முதலில் விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், படத்தை 27-ம் தேதி காலை 10.30 மணி வரையில் ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டது. இன்றைய முதற்கட்ட விசாரணையில்.
ஹெச்.ஆர். நிறுவனம் ரூபாய் 7 கோடிகளை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், படத்தின் மொத்த ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனால், படத்தின் காலை காட்சிகளும் மதிய காட்சிகளும் ரத்தானது.
இது தொடர்பாக, ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், எச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து பேசி சுமூக தீர்வு ஏற்பட்ட நிலையில் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று 6.30 மணி காட்சி தொடங்கியுள்ளது.
இப்படத்தின் கதைக்களம், மதுரையை மையமாகக் கேங்ஸ்டர் ஸ்டோரி. முன்னதாக, படத்தின் இயக்குனர் அருண்குமார் தெரிவிக்கையில், முதல் 20 நிமிட நிமிட காட்சிகளை தவற விடாதீர்கள்’ என்றார். ஆனால், இன்று படத்தின் முதல் இரண்டு ஷோ தவறிவிட்டது. இதனால், விக்ரம் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
