லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை தளபதி விஜய் பகிர்ந்து இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று லியோ. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.

ஆனால் இம்முறை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி விஜய் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ என்னும் பாடல் தனது பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை ஸ்பெஷல் போஸ்டருடன் அறிவித்திருக்கிறார். இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அப்போஸ்டரை இணையதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.