அரசியலுக்கு வந்தால் நடிக்க மாட்டேன் என விஜய் அறிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வர போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில் நேற்று தளபதி விஜய் ரசிகர் மன்ற செயலாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது அரசியல் என்ட்ரிக்கு பிறகு நிச்சயம் நடிக்க மாட்டேன் என விஜய் அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.