விஜய்க்கு வேண்டுகோள் விடுத்த பிரபல அரசியல் கட்சி தலைவரின் பேட்டி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்பவர் தளபதி விஜய். தற்போது லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் இவர் இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படங்கள் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகிய வைரலாகி வரும் நிலையில் அரசியலுக்கு வர இருக்கும் தளபதி விஜய் குறித்து பல அரசியல் தலைவர்கள் பகிர்ந்து வரும் பேட்டியின் தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜயின் அரசியல் வருகையை வரவேற்பதாக கூறி அவரிடம் வேண்டுகோள் வைத்த பிரபல அரசியல் கட்சி தலைவரின் பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், விஜய் அரசியலுக்கு வர வேண்டும், அதை நாங்கள் வரவேற்கிறோம். அவர் அரசியலில் வந்ததும் புள்ளிங்கோவாக மாறும் ரசிகர்களை மாற்ற வேண்டும். அந்த ரசிகர்கள் போதை கலாச்சாரத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லஞ்சம், ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து ரசிகர்கள் போராடுவதற்கான மனப்பான்மையை உருவாக்க வேண்டும். என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.