சூர்யா வைத்த பிரியாணி விருந்து: எதற்கு தெரியுமா?

Web Ads

மகிழ்ச்சியை பிரியாணி வைத்து பரிமாறியுள்ளார் சூர்யா. இது பற்றி ருசிப்போம்..

மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கங்குவா’ படம் ஏமாற்றமாய் அமைந்தது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ கலவையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை திருப்திப்பட வைத்துள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்பட பாடல்கள் டிரெண்டானது.

மே 1-ந்தேதி வெளியான ‘ரெட்ரோ’ வசூலிலும் அதிகரித்து வருகிறது. சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில், இந்த படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கார்த்திக் சுப்பராஜ் தெரிவிக்கையில், ‘ரெட்ரோ’ படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும், திரையரங்குகளில் ஒலித்த ஆரவாரம், கைதட்டல் மற்றும் உங்களுடைய அன்பை வழங்கிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் எங்கள் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி. இது நல்ல நேரத்துக்கான தொடக்கம் என்று தெரியும். ஆனால், இதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் தலைமையில் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டது. தற்போது, ரெட்ரோ படத்தின் வெற்றிக்கும் சூர்யா பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

actor suriya celebrates the success of his film retro
actor suriya celebrates the success of his film retro