ஸ்டைலாக மாறிய நடிகர் சூரியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூரி. முதலில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலில் நடித்து அசதி இருந்த இவர் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் சூரி தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஒரு படத்திலும், எதிர்நீச்சல் பட இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படி பிசியான நடிகராக மாறி இருக்கும் சூரி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டைலிஷான லுக்கில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து நலமே சூழ்க! என்ற தலைப்புடன் பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் சூரியன் இந்த டிரான்ஸ்பர்மேஷனை பாராட்டி கமெண்ட்களை குவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.