Actor Soori Video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, kathir, Sarbath, Actor Soori
நடிகர் ரஜியின் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.

தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில், சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பின் ரஜினி கிராமம் சார்ந்த கதையில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஜோதிகா, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரிடம் படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சூரியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது உறுதியானால் சூரிக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல்படமாக இப்படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.