Pushpa 2

சிவகார்த்திகேயனின் திரைப் பயணம் வேற லெவல்: இதோ செலக்டிவ்வான படங்கள்..

இனி வரும் ஒவ்வொரு திரைப்படமும் சிவகார்த்திகேயன் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அதனால், கதையை தேர்வு செய்வதில் கவனமாய் இருக்கிறார். அவ்வகையில் தொடர்ந்து வெளிவர இருக்கும் அவரது படங்கள் குறித்த தகவல் காண்போம்..

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மகிழ்ச்சியை வாரி வழங்கி வருகிறது.

இப்படம் சிவகார்த்திகேயனின் மீதான மரியாதையை மேலும் அதிகரித்துள்ளது. வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் மிகவும் பொருந்தி நடித்திருக்கிறார்.
ஒரு ராணுவ வீரராக நடிக்க கடினமாக உழைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 150 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது. மேலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தொடர்ந்து SK23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

ஏ.ஆர் முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இதுவும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் உருவாகும் சீரியஸான படமாக தான் இருக்குமாம்.

இப்படத்தை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். SK24 என அழைக்கப்படும் அப்படம் கலகலப்பான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு சீரியஸான படமாக இருக்குமாம்.

இந்நிலையில் ஒரு படம் சீரியஸாகவும் அடுத்ததாக கலகலப்பான கமர்ஷியல் படத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து உருவாகி வரும் SK23 படமும் சீரியஸான படமாக இருந்தாலும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

தற்போது சிவகார்த்தியின் திரைப்பயணம் வேற லெவலில் தெறிக்கிறது.

actor sivakarthikeyan new movies list
actor sivakarthikeyan new movies list