சச்சின், டோனியையே விமர்சனம் செய்யும்போது இவனென்ன: சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸ்..

Web Ads

சிவகார்த்திகேயன் கேரியர் ‘அமரன்’ படத்திற்கு பிறகு மாஸாகி விட்டது. தற்போது மதராஸி, பராசக்தி என முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில்,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் செம்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது.

‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து பாராட்டினார் என்று இணையத்தில் பரப்பினார்கள். இந்த கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில, எஸ்கே தெரிவிக்கையில்,

‘ஒரு படம் நன்றாக இருக்கிறது, எனக்கு பிடித்திருக்கிறது என்றால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டுகிறேன். இவன் என்ன பெரிய ஆளா என்று கேட்கிறார்கள். நல்லது பண்ணுவதற்கு எதற்கு யோசிக்க வேண்டும்.

விமர்சனமும் ஒரு பகுதி தான். பல சாதனைகளை செய்த சச்சினையும் விமர்சனம் செய்தார்கள். சென்னை அணிக்காக 5 கோப்பைகள் வென்ற பிறகும், டோனியையும் விமர்சனம் செய்தார்கள். இப்படியிருக்கும்போது, நான் யாரை குறை சொல்வது. நல்லவற்றை எடுத்துக் கொண்டு முன்னே சென்றுவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதராஸி’. அனிருத் இசையில் உருவான படம் பார்ப்போம். முன்னதாக ‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரை பாராட்டினார் எஸ்கே என்பது நினைவுகூரத்தக்கது.

actor sivakarthikeyan feel with my cine life
actor sivakarthikeyan feel with my cine life