துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆப் கோத்தா திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக தனக்கென தனி இடம் பிடித்து வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் பத்து தல திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்காக உடல் எடை குறைத்து பல பயிற்சிகளை எடுத்து வரும் சிம்பு தற்போது பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருக்கும் படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி சோசியல் மீடியா பக்கங்களில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அதாவது, அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கிங் ஆப் கோத்தா (KOK)’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் வரும் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசரை வெளியிட இருக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வரும் 28ஆம் தேதி வெளியிடுவார் என்று படக்குழு போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.