நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்க உள்ளனர். ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இப்படம் தொடர்பான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் வரலாற்று சார்ந்த கதைக்களமாக இப்படம் உருவாக இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வைரலானது.

அதன் பிறகு நடிகர் சிம்பு லண்டனுக்கு சென்று இதற்கான பிரத்தியேக பயிற்சிகளை எடுத்து வருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது லண்டனிலிருந்து ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.