கண்ணீருடன் பருத்திவீரன் சரவணன் ‘டான் படம்’ குறித்து பேசிய வீடியோவை வெளியிட்டார்.

Actor Saravanan About Don Movie : பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சரவணன். இவர் 1991 இல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் வெளியான பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி போன்ற பல படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதன்பின் சில ஆண்டுகள் கழித்து பருத்திவீரன் படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார். மேலும் சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். தற்போது இவர் சேலத்தில் ‘டான்’ படம் பார்த்துவிட்டு கண்ணீருடன் இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

மேலும் இதில் தந்தையாக நடித்த சமுத்திரகனியின் கதாபாத்திரம் தனது தந்தையின் ஞாபகங்களை வரவழைத்தது என்றும் கல்லூரி ஆசிரியராக நடித்த எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் தனது கல்லூரி ஞாபகங்களை வரவழைத்தது என்றும் கூறியுள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பு அருமையாக இருந்தது எனவும் திரையரங்கில் அனைவரும் கண்கலங்கியதாகவும் கூறியிருக்கிறார்.