குறுகிய கால தயாரிப்பில், சிம்பு-சந்தானம் காம்போவில் புதிய படம்
சிம்பு நடிக்கவிருக்கும் 49-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம்.
‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம்.
சந்தானம் நாயகனாக நடித்து வந்தாலும், அவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால், அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் சந்தானம்.
தற்போது சிம்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘எஸ்.டி.ஆர் 49’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் இப்படம் குறுகிய கால தயாரிப்பாக ஒரே கட்டத்தில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தற்போது, சிம்புவுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருக்கிறார். ஆக, படத்தில் காமெடிக்கும் கலாய்ப்புக்கும் பஞ்சமிருக்காதுன்னு எதிர்பார்க்கலாம்.