Web Ads

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் சந்தானம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகிறார்.

‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகின்றனர்.

அவ்வகையில் ‘ஜெயிலர்2’ படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அதன்படி, இப்படத்தில் ரஜினியுடன் பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமுடு, சந்தானம், பகத் பாசில், தமன்னா, வித்யாபாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்2’ படத்தில் சந்தானம் நடிப்பதால் நகைச்சுவைக்கு குறைவிருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் ‘ஜெயிலர்2’ படப்பிடிப்பிற்காக சந்தானம் அடுத்த மாதம் முதல் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, இப்படத்தை முடித்துவிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

actor santhanam joining in jailer 2 movie
actor santhanam joining in jailer 2 movie