கோபத்தில் விஜய் கேட்ட வார்த்தையால் சண்டை உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தான் சஞ்சீவ். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி நடித்து வரும் சஞ்சீவ் பேட்டி ஒன்றில் விஜயுடன் ஏற்பட்ட சண்டை குறித்து பேசி உள்ளார்.
அதாவது எல்லாரும் நான் விஜய் மாதிரியே சிரிக்கிற விஜய் மாதிரியே நடிக்க வேண்டும் என்று சொன்னதால் இதை எல்லாரும் இப்படி சொல்றாங்க நீ அந்த மாதிரி பண்ணாத. நான் வருசத்துக்கு ஒன்னு அல்லது ரெண்டு பழம் தான் பண்றேன் நீ சீரியல்ல தொடர்ந்து மக்கள் பார்க்கிற மாதிரி பண்ணிட்டு இருக்க அப்புறம் நீ என்ன மாதிரி பண்றியா இல்ல நான் உன்ன மாதிரி பண்றனானு மக்களுக்கு சந்தேகம் வந்துடும் என்று என்கிட்ட வந்து சொன்னான். அதனால நான் கோபப்பட்டேன். அதனால் விஜய் கோச்சுக்கிட்டு என்கிட்ட கொஞ்ச நாள் பேசாம இருந்தான் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் அளித்த இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.