radha mohan
ராதாமோகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.

Actor S.J.Suriyah join hands with Radhamohan – மொழி, காற்றின் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராதாமோகன் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த திரில்லராக உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த பூஜையில் இயக்குனர் செல்வராகவனும் கலந்து கொண்டார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 9ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விஜயை அடுத்து அதிகாரபூர்வமாக வெளியான இந்துஜாவின் கெட்டப் – அடையாளமே தெரியலையே.

இப்படத்தை 2020ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது எஸ்.ஜே. சூர்யா உயர்ந்த மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ராதாமோகன், எஸ்.ஜே.சூர்யா, யுவன் சங்கர ராஜா என வித்தியாசமான கூட்டணி அமைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.