நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இருக்கும் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டார் திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170 ஆவது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் “தலைவர் 170” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாக்கியதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் மற்றொரு படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இருக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க போவதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.