நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்ட நடிகர் ரஜினி நட்பின் அடிப்படையில் தெலுங்கு தேசம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருகிறது.