நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக பயணத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது நடிப்பில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வரும் இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்று ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் உள்ள துறவிகளை சந்தித்தார். அதன் பிறகு அங்குள்ள தயானந்த சரஸ்வதி துறவிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தா நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுப்பட்டார்.

தற்போது இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து திரும்பிய ரஜினி, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆனதை தொடந்து ரஜினி தற்போது ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்திருக்கிறார். மேலும், அந்த ஆசிரமத்துக்கு அவர் நன்கொடை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.