Actor Rahman Family Photo

வயசானாலும் இளமை மாறாத ரஹ்மானின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actor Rahman Family Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுமான். 1980 மற்றும் 90களில் ஹீரோவாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் கூட ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பில்லா 2, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

இதுவரை இவரது குடும்பத்தார் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்றது இல்லை. இதனால் இவர்கள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வாய்ப்பில்லை.

இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ரஹ்மான். இந்த புகைப்படத்தில் இணையத்தில் வெளியிட முதல் முறையாக குடும்ப புகைப்படம் வெளியானதால் செம வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இளமை மாறாத ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? இருவரும் விரைவில் நடிக்க வந்து விடுவார்கள் போல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.