சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் பிரபு அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் மூத்த முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் பிரபு. 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சிறப்பு கௌரவ வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தனியார் நிறுவனத்தின் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபுவின் பேட்டியின் தகவல்கள் தற்போது வைரலாகி. அதில் அவர் முதலில், தென்னிந்திய திரைப்படங்களை வடமாநில மக்கள் மிகவும் விரும்பி பார்ப்பதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு, நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். சமூகத்துக்கு அவர் எதாவது செய்ய வேண்டும். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். என்றார்.

அதை அடுத்து, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று ரசிகர்கள் கூறி வருவது குறித்த கேள்விக்கு நடிகர் பிரபு, “சூப்பர் ஸ்டார் என்றாலே அண்ணன் ரஜினி தான். மற்றவர்கள் எல்லோரும் சூப்பரான ஆக்ட்ரஸ். எனக் கூறியுள்ளார். மேலும் ரஜினியே என்ன சொன்னார், நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்லி வழிவிடுகிறார். ரஜினி சூப்பர் ஸ்டார் தான். மற்றவர்கள் அந்த இடத்துக்கு வந்தால் சந்தோஷம்தான். என்றார். அதன் பிறகு தம்பி அஜித்தும் இருக்கிறார் வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும்” என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.