‘ஓஜி’ பட இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படம்..

Web Ads

நானி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல்கள் காண்போம்..

பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நானி – சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

முன்னதாக, நானி படத்தின் பணிகளை பல மாதங்களாகவே செய்து வந்தார் சுஜித். இதன் பொருட்செலவு அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர் மாறியுள்ளார். தற்போது நிகாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘ப்ளடி ரோமியோ’ என இப்படத்துக்கு பெயரிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.

இப்படத்தில் நானியுடன் நடிக்கவிருப்பவர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், இப்படம் ஒரு டார்க் காமெடி பாணியில் இருக்கும் எனவும், மிகவும் சிரமப்பட்டு படமாக்கக் கூடிய கதை எனவும் சுஜித் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

actor nani director sujith film work begins with pooja

actor nani director sujith film work begins with pooja