தனுஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மித்ரன் ஜவஹர். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

எதார்த்தமான கதைகளத்துடன் வெளியான இப்படத்தாள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் மித்ரன் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் தொடர்பான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.