படப்பிடிப்பை நிறைவு செய்த ருத்ரன் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது கதிரேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ருத்ரன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

மிரட்டலான குரலில் பேக் அப் சொன்ன சரத்குமார்!!… ருத்ரன் படக்குழுவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ.!

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதை படக்குழு ஸ்பெஷல் வீடியோவுடன் அறிவித்துள்ளது. அதில் நடிகர் சரத்குமார் தனது மிரட்டலான குரலில் பேக் அப் எனக் கூற அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.