நடிகர் கமல்ஹாசன் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘Project K’ திரைப்படத்தில் இணைந்திருப்பதாகதகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, தெலுங்கு திரை உலகில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். அவர் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘Project K’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரபட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தில் சுவாரஸ்யமான தகவலாக நடிகர் கமல்ஹாசன் முழு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், 20 நாட்கள் நடைபெற இருக்கும் படப்பிடிப்பிற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறது.