விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகிறது.. ஹரிஷ் கல்யாண் வேதனை..!

ஹரிஷ் கல்யாண் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது.

actor harish kalyan latest speech viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண் தற்போது இவரது நடிப்பில் டீசல் என்ற திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
சண்முக முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி,அனன்யா, தியா, தீனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். அதாவது டீசல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது பெரிய ஹீரோ பெரிய இயக்குனர் இல்லையே என்று கேட்கின்றனர் நான் நடித்த படம் தீபாவளிக்கு வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கும் ஆனால் சந்தோஷமாக இருந்தாலும் விமர்சனங்களால் என்னை காயப்படுத்துகின்றனர் தீபாவளிக்கு ரிலீசாக என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை நல்ல கதை மற்றும் நல்ல ஆட்கள் இருந்தால் போதாதா என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor harish kalyan latest speech viral