
புஷ்பா 2 படத்துக்காக பகத் பாஹில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.
மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் தற்போது தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மற்ற மொழி படங்களில் நடிக்க சில கோடிகள் மட்டுமே சம்பளம் வாங்கி வந்த இவர் புஷ்பா 2 படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் இந்த படத்திற்காக பகத் பாசில் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
