தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..
தனுஷின் ‘இட்லி கடை’ யில் போட்ட அப்டேட் டேஸ்ட்டானு பார்ப்போம்.. வாங்க..
பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படம் ஜனவரி மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்தில் இட்லி விற்பனை செய்பவராக வருகிறார்.
இந்த படத்தில், தனுசுக்கு ஜோடியாக ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் மீண்டும் ஜோடியாகியுள்ளார். ஷாலினி பாண்டே 2-வது நாயகியாக நடிக்க, அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதில், தனுஷ் ராஜ்கிரணுடன் நிற்பது போலவும், மற்றொரு புகைப்படத்தில் கையில் இரண்டு தூக்கு சட்டைகள் மற்றும் ஒரு கையில் காய்கறி பையுடன் நிற்கிறார். வேஷ்டி சட்டையில், தோளில் துண்டு போட்டு கொண்டு, நெத்தியில் பட்டை அடித்துக் கொண்டு, தனுஷ் ஒரு கிராமத்து மனிதர் போல் உள்ளதால், இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.