டி 50 திரைப்படம் குறித்த அப்டேட்டை நடிகர் தனுஷ் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பிரமிக்க வைக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்து ஒரு உலக அரங்கில் ஆச்சரியப்படும் அளவிற்கு சிறந்த நடிகராக விளங்கி வரும் இவர் தற்போது இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வந்த இவர் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில் தனுஷின் அடுத்த படமான “டி 50” திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி அவர்களை உற்சாகத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி இருப்பதாக நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இப்படம் தொடர்பான இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் அழுத்தி தற்போது இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.