மாரடைப்பால் பிரபல தமிழ் நடிகர் கலைமாமணி அமர சிகாமணி காலமானார்.

Actor Amara Sigamani Passes Away : தமிழ் சினிமாவில் வெளியான திரைப் படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் கலைமாமணி அமர சிகாமணி.

நடிகராக மட்டுமல்லாமல் கவிஞராகவும் அறியப்பட்ட இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய மறைவுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.